parallax background

“மண்மாற்றம்”

April 24, 2017
“செல்லியல் பார்வைகள்”
April 24, 2017

“மண்மாற்றம்” - நாவல் களம்


இரா.முத்தரசன் எழுதிய இந்த “மண்மாற்றம்” நாவல், அஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனமும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து 2004-ஆம் ஆண்டில் நடத்திய நாவல் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றதாகும்.

2013 -ஆம் ஆண்டு முதல், இணையத்திலும், செல்பேசி குறுஞ்செயலி தளத்திலும் இயங்கிவரும் ‘செல்லியல்’ என்ற தகவல் ஊடகத்தின் இணை தோற்றுநரான இரா.முத்தரசன், அந்த ஊடகத்தின் நிருவாக ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றார்.

1980-ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் பல இரப்பர், செம்பனைத் தோட்டங்கள் மேம்பாடு என்ற பெயரில் வீடமைப்புத் திட்டங்களாகவும், கோல்ப் விளையாட்டுத் திடல்களாகவும், மாபெரும் நவீனத் திட்டங்களாகவும் உருமாற்றம் கண்டன. புதிய விமான நிலையம், புத்ரா ஜெயா நகர், சைபர் ஜெயா, போன்ற பிரம்மாண்டமான நவீனத் திட்டங்கள் இன்று அமைந்திருக்கும் நிலப்பகுதிகள் ஒரு காலத்தில் தோட்டங்களாக இருந்தவைதான். அத்தகைய ஒரு தோட்டம் உருமாற்றம் கண்டபோது அதில் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தின் கதையைக் கூறுகிறது ‘மண்மாற்றம்’.

நமது மூதாதையர்கள் தமிழ் நாட்டிலிருந்து இங்கு வந்து இரப்பர் தோட்டங்களில் தஞ்சமடைந்த சம்பவங்களையும், தோட்டத்திலிருந்து மேம்பாடு என்ற பெயரில் வெளியேற்றப்பட்ட குடும்பங்களின் சோகப் பின்னணிகளையும், இவற்றுக்கிடையில், அத்தகைய பாதிப்புகளைப் படிக்கல்லாகப் பயன்படுத்தி முன்னேறத் துடிக்கும் இளைய சமுதாயத்தினரின் எண்ணங்களையும் நாவலின் கதைக் களமும், அதில் வரும் கதாபாத்திரங்களும் பிரதிபலிக்கின்றன....

“மண்மாற்றம்” நாவலுக்கு இணைப் பேராசிரியர் கிருஷ்ணன் மணியம் வழங்கிய ஆய்வுரையிலிருந்து....

கீழே உள்ள படிவத்தை நிரப்பி இந்நூலை இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *