parallax background

“செல்லியல் பார்வைகள்”

“மண்மாற்றம்”
April 24, 2017

“செல்லியல் பார்வைகள்”


கட்டுரைத் தொகுப்பு நூலைப் பற்றி...


2013 தை முதல் நாளில் அதிகாரபூர்வமாகத் தொடக்கம் கண்ட ‘செல்லியல்’, இணையம், செல்பேசி குறுஞ்செயலி என இரு தளங்களிலும், தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் மலேசியாவில் வெளியீடு கண்ட முதல் தகவல் ஊடகமாகும்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் ‘செல்லியல்’ இன்று மலேசியாவில் இணையத் தளம், செல்பேசி குறுஞ்செயலி என இருதளங்களிலும் வாசகர்களுக்கு இலவசமாக செய்திகளை வழங்கி வரும் ஒரே தகவல் ஊடகமாகும்.

அதன் இணைத் தோற்றுநரும், நிருவாக ஆசிரியருமான இரா.முத்தரசன், பல்வேறு நிகழ்வுகளையும், சம்பவங்களையும் அடிப்படையாக வைத்து, அரசியல், இலக்கியம், வணிகம், உலகம், கலையுலகம் என பல முனைகளிலும் அவ்வப்போது செல்லியலில் தனது ‘பார்வைகளாக’ பதித்து வந்த கட்டுரைகளில் சிலவற்றின் தொகுப்பாக மலர்கின்றது இந்நூல்.

செல்லியலில் வெளிவந்த இக்கட்டுரைகளின் மூல வடிவத்தின் இணைய இணைப்பு ஒவ்வொரு கட்டுரையிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் இந்தக் கட்டுரையின் மூல வடிவத்தை வாசகர்கள் இணையம் மூலம் படிக்க முடியும் என்பதோடு, பகிர்ந்து கொள்ளவும் முடியும்.


 
கட்டுரை பதிவேற்றம் கண்ட பின்னர் கால ஓட்டத்தில் நிகழ்ந்த சில மாற்றங்கள் காரணமாக இந்த நூலுக்காக அந்தக் கட்டுரைகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதோடு, முக்கிய மாற்றங்கள் பின்குறிப்புகளாக இந்த நூலில் கூடுதலாக இணைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நூல், மின்னூல் பதிப்பாக, உலகமெங்கும் உள்ள வாசகர்கள் இலவசமாகவே படித்து மகிழும் வண்ணம் அச்சு வடிவம் வெளியாகும் அதே 25 ஏப்ரல் 2017 ஆம் நாளில் வெளியிடப்படுகின்றது.


கீழே உள்ள படிவத்தை நிரப்பி இந்நூலை இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *